Bigg Boss Tamil 5 - தொடங்கியது பிக் பாஸ் 5 ஷூட்டிங்... வைரலாகும் கமல் ஹாசன் லுக்!
Kamal Haasan look for Bigg Boss Tamil 5 goes viral பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் தொடங்கிய நிலையில், கமல் ஹாசனின் தோற்றம் வெளிவந்துள்ளது. பிக் பிரதரின் இந்திய தழுவலான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. இது இந்தியில் மட்டுமல்ல, பல பிராந்திய மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரியை டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது. பிக் பாஸ் கமல் ஹாசன் தற்போது ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 5-ஐ பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் 5-ன் ப்ரோமோ ஷூட்டிங் தொடங்கி விட்டதாக நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம். ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும், யார் போட்டியாளர்கள் என்பதில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே அளவு கமலின் லுக் மீதும், காஸ்ட்யூம்ஸ் மீதும் இருக்கும். அந்த வகையில் பிக் ப...